Document
  • News
  • Delight Programme

Nazareth Margoschis College at Pillaiyanmanai - Delight Programme

Delight Programme:

news image

13 May 2020

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் ‘டிலைட்’ மாணவர் உதவித் தொகை வழங்கும் விழா:


நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் டிலைட் மாணவர் உதவித் திட்டம் சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் வழங்கும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. பாடகர் குழுவினர் துதிப்பாடல் பாடினார்கள். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர். பிராங் மெரின் ஆரம்ப ஜெபம் செய்தார். துணை முதல்வர் முனைவர். பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர். அருள்ராஜ் பொன்னுதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றியும், மாணவர்கள் இதனை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஐடியல் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஞானராஜ் கோயில்பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துறைக்கு மூன்று மாணவர்கள் வீதம் 40 மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார். மேலும் ஆண்டுதோறும் டிலைட் திட்டத்திற்கு தனது பங்களிப்பாக பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்தார். முனைவர். ஜீவி எஸ்தர், நிதிக்காப்பாளர் முனைவர். குளோரியம் அருள்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். அந்தோணி செல்வகுமார் நன்றி கூறினார். முனைவர். பியூலா ஹேமலதா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். விழாவிற்கான ஏற்பாட்டினை கல்லூரிச் செயலர் ளு.னு.மு. ராஜன் ஆலோசனையின்படி கல்லூரி முதல்வர் முனைவர். அருள்ராஜ் பொன்னுதுரை, பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தார்கள்.